ஆடம்பர எஸ்.யு.வி. கார் தயாரிக்கும் ஃபெராரி

ஆடம்பர எஸ்.யு.வி. கார் தயாரிக்கும் ஃபெராரி
ஆடம்பர எஸ்.யு.வி. கார் தயாரிக்கும் ஃபெராரி
Published on

ஆடம்பர எஸ்.யு.வி. ரக கார் தயாரிக்கவில்லை என பலமுறை தெரிவித்து வந்த ஃபெராரி, ஒருவழியாக உண்மையை ஒப்பு கொண்டுள்ளது. ஃபெராரி நிறுவனத்தின் முதல்
எஸ்.யு.வி. கார் இந்த ஆண்டு வெளியாவதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஆடம்பர எஸ்.யு.வி. கார் தயாரிக்கவில்லை என பலமுறை நிராகரித்து வந்த ஃபெராரி நிறுவனம் ஒருவழியாக உண்மையை தெரிவித்துள்ளது. ஃபெராரி நிறுவனம் F16X
என்ற குறியீட்டு பெயர் கொண்ட எஸ்.யு.வி. ரக காரை தற்சமயம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இத்தகவலை உறுதி செய்யும் வகையில் இந்த ஆண்டு
ஃபெராரி நிறுவனத்தின் முதல் ஆடம்பர கார் வெளிவரும் என தெரிவித்துள்ளது. இதுவரை வெளியாகியுள்ள ஆர்டிஸ்ட்டிக் ரென்டர்களில் ஃபெராரி FF அல்லது சமீபத்தில்
அறிமுகம் செய்யப்பட்ட ஃபெராரி GTC4 லுசோ ஷூட்டிங் பிரேக் போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. புதிய எஸ்.யு.வி. சிறப்பான கிரவுண்ட் கிளியரன்ஸ்
வழங்குவதோடு, ஃபெராரிக்கென பிரபலமான ஏரோடைனமிக் தோற்றத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆடம்பர எஸ்.யு.வி. என்பதால் இது லம்போர்கனியின்
உருஸ் எஸ்.யு.வி. மாடலுக்கு போட்டியாக அமையும் என்றும் சாலைகளில் வேகமாக செல்வதோடு ஆஃப்-ரோடுகளிலும் வேகமாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.2,20,96,107 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கருதப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com