2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ரியல் எஸ்டேட் துறையினர் தங்கள் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி என்பது அந்த துறையை சார்ந்த சிமெண்ட், இரும்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து உற்பத்தி சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக இருக்கும் ஒரு துறை. கொரோனாவால் கட்டுமான பொருட்கள் மற்றும் ஆட்கள் கூலி ஏறியதால் இந்த துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே வரிச்செலவு மற்றும் கட்டுமான செலவை குறைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர் இத்துறையினர்.