கொரோனா பெருந்தொற்று சூழலை கருத்தில்கொண்டு EPF, ESI திட்டத்தில் இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொழிலாளர்களுக்கான சலுகைகள் குறித்து மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி ESI திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் கொரோனாவால் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இபிஎஃப் திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் கொரோனாவால் இறந்தால் அவர்களுக்கு வைப்புத்தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தின் பலன் 6 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தி தரப்படும் என்றும் தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பலன்களை பெறுவதற்காக இபிஎஃப், இஎஸ்ஐ தொழிலாளர்களிடம் கூடுதல் தொகை எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.