நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை பத்து காசு விலை உயர்ந்து, 4 ரூபாய் 45 காசாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
12 நாட்களுக்குப் பிறகு முட்டையின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாளான நவம்பர் ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மதிய உணவிற்கு முட்டைகள் முழு அளவில் அனுப்பப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. இப்படியாக முட்டையின் தேவை அதிகரித்ததால், விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பண்டிகை தினங்கள் வரவுள்ளதால், வரும் நாட்களில் முட்டையின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
தொடர்புடைய செய்தி: கரூர்: புழு உருவான நிலையில் சத்துணவு முட்டைகள் இருந்ததால் அதிர்ச்சி