"விவோ" மொபைல் நிறுவனத்துக்கு சொந்தமான 44 இடங்களில் ரெய்டு!

"விவோ" மொபைல் நிறுவனத்துக்கு சொந்தமான 44 இடங்களில் ரெய்டு!
"விவோ" மொபைல் நிறுவனத்துக்கு சொந்தமான 44 இடங்களில் ரெய்டு!
Published on

சீன மொபைல் ஃபோன் நிறுவனமான விவோ (VIVO) மற்றும் அது தொடர்புள்ள 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

சீன மொபைல் ஃபோன் நிறுவனமான விவோ (VIVO) மற்றும் அது தொடர்புள்ள 44 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான குற்றச்சாட்டு அடிப்படையில் இச்சோதனைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய அரசு நிறுவனங்களான அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான சியோமி, இசட் டி இ ஆகியவற்றின் நிதி செயல்பாடுகள் குறித்தும் மத்திய அரசு விசாரணைகள் நடத்தி வருவதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது. 

கடந்த மே மாதம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA), 1999 இன் விதிகளின் கீழ் சியோமி நிறுவனத்தின் ரூ.5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ஆனால் அந்த உத்தரவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com