மாருதி, ஹோண்டா, ஹூண்டாய், டாடா, டொயோட்டா, டாட்சன் மற்றும் பல முன்னணி கார் தயாரிப்பாளர்களும் இந்த பண்டிகைகாலத்திற்கு ஒவ்வொரு கார் மாடலுக்கும் ரூ 2.5 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறார்கள்.
கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்காலம் சிறப்பாக தொடங்கியுள்ளது. இப்பண்டிகை காலங்களில் வாகனத் தொழில் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இந்தஆண்டு அக்டோபர் மாத விற்பனை புள்ளிவிவரங்கள் புதிய வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பதை வெளிப்படுத்தியுள்ளன, மேலும் வாகன விற்பனை நவம்பரிலும், குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போது அதிகரிக்கும் என்று தொழில் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
கோவிட்-19 இன் நிதிநெருக்கடி தாக்கங்கள் இன்னும் குறையாத போதிலும் , கார் தயாரிப்பாளர்கள் தள்ளுபடிகள் மற்றும் பண்டிகைகால சலுகைகளை வழங்குவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். மாருதி, ஹோண்டா, ஹூண்டாய், டாடா, டொயோட்டா, டாட்சன் மற்றும் பல முன்னணி கார் தயாரிப்பாளர்களும் இந்த பண்டிகைகாலத்திற்கு ஒவ்வொரு கார் மாடலுக்கும் ரூ .2.5 லட்சம் வரை தள்ளுபடியை வழங்குகிறார்கள்.
மாருதி, ஹோண்டா, ஹூண்டாய், டாடா, டொயோட்டா,டாட்சன் மற்றும் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் தங்களின் ஒவ்வொரு மாடல் கார்களுக்கும் குறிப்பிட்ட தள்ளுபடித்தொகை, தங்க நாணயங்கள், பரிசுகள் போன்ற சலுகைகளை அறிவித்துள்ளனர்.