நேற்று தொடங்கிய 15-வது ஐபிஎல் சீசன் வரும் மே மாதம் 29-ஆம் தேதி அன்று நிறைவு பெறுகிறது. பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகிறது. அந்த போட்டிகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கும் வசதியும் உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் - ஐடியா (Vi) நிறுவனங்கள் இதற்கென கொண்டுவந்துள்ள ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் இலவச சந்தா குறித்த விவரங்களை அறிவித்துள்ளன.
ஏர்டெல்!
ரூ.3,359 = தினமும் 2 ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி, இலவச அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடம் இலவசம்.
ரூ.838 = தினமும் 2 ஜிபி டேட்டா, 56 நாட்கள் வேலிடிட்டி, இலவச அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடம் இலவசம்.
ரூ.599 = தினமும் 3 ஜிபி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி, இலவச அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடம் இலவசம்.
ரூ.499 = தினமும் 2 ஜிபி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி, இலவச அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடம் இலவசம்.
ஜியோ!
ஏர்டெல் நிறுவனத்தை போலவே ரூ.499 பிளானை வழங்குகிறது ஜியோ. இது தவிர மேலும் சில ரீசார்ஜ் பிளான்கள் உள்ளன.
ரூ.2,999 = தினமும் 2.5 ஜிபி டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி, இலவச அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடம் இலவசம்.
ரூ.799 = தினமும் 2 ஜிபி டேட்டா, 56 நாட்கள் வேலிடிட்டி, இலவச அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடம் இலவசம்.
ரூ.1,066 = தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 5 ஜிபி டேட்டா. அன்லிமிடெட் அழைப்புகள். 84 நாட்கள் வேலிடிட்டி, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஒரு வருடம் இலவசம்.
இதே போல 555, 3119, 601, 659, 4199 என பல்வேறு ரீசார்ஜ் பிளான்கள் ஜியோவில் உள்ளது.
வோடாபோன் ஐடியா!
499, 601, 901, 1066, 3099 என ஐந்து ரீசார்ஜ் பிளான்களை கிரிக்கெட் பேக்கில் வழங்குகிறது வோடாபோன் ஐடியா.