சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக குறைந்துள்ளது
உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரை உயர்ந்தது. எனினும் பின்னர் படிப்படியாக குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய்க்கு 100.58 டாலராக குறைந்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து எரிவாயு இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் திட்டத்தை அமலாக்குவதை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி வைத்ததே கச்சா எண்ணெய் விலை குறைய காரணமாகும். பிரென் கச்சா எண்ணெய் விலை ஒரே வாரத்தில் 13% குறைந்துள்ளது. 2 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரே வாரத்தில் இவ்வளவு விலை குறைவது இதுவே முதல்முறையாகும்.
எனினும் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் சென்று விடக் கூடாது என்பதற்காக ஓபெக் எனப்படம் எண்ணெய் வள நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.