தங்கள் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவதை பல நிறுவனங்கள் இந்தாண்டு கணிசமாக குறைத்துக் கொண்டதாக, அசோசெம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் பரிசு வழங்குவதை தொழில் நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளன. இதை அந்நிறுவனங்களின் பணியாளர்களும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால் இந்த வருடம் பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குவதை குறைத்துக்கொண்டன. இதற்கான பட்ஜெட்டை 35 முதல் 40 சதவிகிதம் வரை குறைத்துவிட்டதாக, தொழில் அமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அசோசெம் பொதுசெயலாளர் டி.எஸ். ராவத் கூறும்போது, ’பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதர நெருக்கடிகள் காரணமாக, இந்த பட்ஜெட்டை நிறுவனங்கள் குறைத்துவிட்டன’ எனத் தெரிவித்துள்ளார்.