ஊரடங்கால் உயர்ந்தது விற்பனை” - புதிய நம்பிக்கையில் பார்லே பிஸ்கட் நிறுவனம்

ஊரடங்கால் உயர்ந்தது விற்பனை” - புதிய நம்பிக்கையில் பார்லே பிஸ்கட் நிறுவனம்
ஊரடங்கால் உயர்ந்தது விற்பனை” - புதிய நம்பிக்கையில் பார்லே பிஸ்கட் நிறுவனம்
Published on

பொது முடக்க நேரத்தில் பார்லே நிறுவனத்தின் பிஸ்கட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பலரும் வீடுகளுக்குள் முடங்கினர். வெளிமாநில தொழிலாளர்கள் பலர் நடந்தே சொந்த ஊர்களுக்குச் சென்றனர். சாலைகளில் கடைகள், உணவகங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் நடந்து சென்றவர்களுக்குத் தொண்டு நிறுவனங்கள் பல பிஸ்கட்களையும் தண்ணீர் பாட்டில்களையும் கொடுத்தன. பல குடும்பங்கள் பிஸ்கட்களை உணவாகவும் உட்கொண்டு பசியாறின. இப்படி பொது முடக்க நேரத்தில் பார்லே நிறுவனத்தின் பிஸ்கட்கள் அதிகம் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் பார்லே நிறுவனத்தில் பங்கு மதிப்பும் 5% உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்துத் தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் மூத்த ஊழியர் ஒருவர், பொது முடக்கம் நேரத்தில் பொதுமக்கள் பலரும் பார்லே பிஸ்கட்களை வீட்டில் வாங்கி சேமித்தும் வைத்துள்ளனர். பல ங்கோ அமைப்புகள் கூட பார்லே பிஸ்கட்களை மக்களுக்குக் கொடுத்து உதவியுள்ளன. மிகக் குறைந்த விலையில் குளுக்கோஸ் கிடைக்கும் உணவு என்பதால் மக்கள் அதிக வரவேற்பு தெரிவித்துள்ளனர். பார்லே நிறுவனத்தில் பங்கு மதிப்பும் 5% உயர்ந்துள்ளது. இது கடந்த 30-40 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சிதான்.

இந்திய மக்கள் பலருக்கும் இது ஒரு பிஸ்கட் மட்டுமல்ல. உணவு. சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர் நேரங்களிலும் பார்லே பிஸ்கட்களின் விற்பனை அதிகரித்தே காணப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா நேரத்தில் பார்லே நிறுவனம் 3 கோடி பிஸ்கட் பாக்கெட்டுகளை இலவசமாகவும் வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com