ஆப்பிள் நிறுவனம் காப்புரிமையை மீறி பொருட்களை தயாரித்ததாகக் கூறி 1.4 பில்லியன் டாலர் நஷ்டயீடு கேட்டு சீன நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
சீன நிறுவனமான ஷாங்காய் ஷிஷென் இண்டெலிஜெட் நெட்வொர்க் டெக்னாலஜி எனப்படும், ஜியயோ நிறுவனம், ஆப்பிள் நிறுவனம் மீது காப்புரிமை மீறல் குற்றச்சாட்டின்கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. அத்துடன் பொருட்கள் உற்பத்தி, பயன்படுத்தல், விற்பனை செய்தது, விளம்பரம் செய்தது மற்றும் இறக்குமதி செய்தது ஆகியவற்றுக்காக 1.43 பில்லியன் அமெரிக்க டாலர்களை நஷ்டயீடாக வழங்க வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குரல் அங்கீகாரம் தொழில்நுட்பம் தொடர்பாக 2004ஆம் ஆண்டு காப்புரிமை கோரி தாங்கள் விண்ணப்பித்ததாகவும் அதற்கு 2009ல் அனுமதி கிடைத்ததாகவும் ஜியயோ நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஆப்பிள் நிறுவனம் தரப்பிலிருந்து அப்போது தங்களுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. பின்னர் ஜியயோ தரப்பிலிருந்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சீன நிறுவனமான ஜியயோ நஷ்டயீடு கேட்டுள்ளது.