சீனாவின் எம்.ஜி.மோட்டார் நிறுவனம் இந்தியாவில் வரும் ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ள இண்டர்நெட் வசதியுடன் கூடிய மின்சக்தி காரை காட்சிப்படுத்தியது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் மின்சக்தி எஸ்யுவி கார்களை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. அந்த நிகழ்ச்சியில், ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட உள்ள இண்டர்நெட் வசதியுடன் கூடிய ZS மின்சக்தி காரும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த காரை எம்.ஜி.மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் ராஜீவ் சாபா அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறை, மின்சாரத்துறையுடன் இணைந்தே செயல்படும் என நம்புவதாகத் தெரிவித்தார். மேலும், இந்தியச் சந்தையில் 10 லட்சம் ரூபாய்க்குள்ளான எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறினார். SUV வகையிலான ZS EV கார்களின் விலை 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.