ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடி மாற்றங்கள்

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடி மாற்றங்கள்
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடி மாற்றங்கள்
Published on

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடியான மாற்றங்களை செயல்படுத்த உள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ நிறுவனம் காலடி எடுத்து வைத்த பின்பு, அனைத்து நிறுவனங்களும் தமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கு ரீசார்ஜ் திட்டங்களில் அவ்வப்போது பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வரிசையில் அடிக்கடி மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ஏர்டெல் நிறுவனம், தற்போது மீண்டும் புதியதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரூ.349 மற்றும் ரூ.549 திட்டங்களில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இதுவரை வழங்கி வந்த டேட்டாவை விட கூடுதல் டேட்டாவை வழங்க உள்ளது. அதாவது, ரூ.349 க்கு ரீசார்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கி வந்த 1.5 ஜிபி டேட்டாவை அதிகமாக்கி 2 ஜிபியாக வழங்க உள்ளது. அதேபோல் ரூ.549 திட்டத்தில் வழங்கப்பட்ட வந்த 3 ஜிபி டேட்டா அதிகமாகி நாள் ஒன்றுக்கு 3.5 ஜிபியாக உயர்த்தி உள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் 28 நாட்களுக்கு வழக்கமாக தரப்படும் அன்லிமிடட் கால்ஸ் சலுகையுடன் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக ரூ.349 திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்கள் 56 ஜிபி டேட்டா, அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் குறுந்தகவல்களை பயன்படுத்தலாம். ரூ.549 திட்டத்தில் 84 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் குறுந்தகவல்களை பயன்படுத்த முடியும்.

டெலிகாம் சந்தையில் தற்போது வரை முன்னணியில் இருந்து வரும் ஏர்டெல் நிறுவனம், ஜியோ நிறுவனத்துடன் போட்டி போடும் அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு டேட்டாவில் அதிகப்படியான சலுகைகளை வழங்கி வருகிறது. அதேபோல் ரூ.199 திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 28 நாட்களுக்கு செயல்படும் 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ், ரூ. 448 திட்டத்தில் 70 நாட்களுக்கு செயல்படும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை திட்டங்கள் ஆரம்பமாகும் நாள் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com