ஆகஸ்டில் வேகமெடுத்த கார் விற்பனை : தேங்கிய பைக்குகள்..

ஆகஸ்டில் வேகமெடுத்த கார் விற்பனை : தேங்கிய பைக்குகள்..
ஆகஸ்டில் வேகமெடுத்த கார் விற்பனை : தேங்கிய பைக்குகள்..
Published on

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கார் விற்பனை வேகமெடுத்துள்ளதாக பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மாருதி சுசுகி நிறுவனம் தன் உள்நாட்டு விற்பனை 20.2% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்டில் மட்டும் 1,16,704 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 38,205 வாகனங்களை விற்றுள்ள ஹுண்டாய் நிறுவனம் தன் விற்பனை 19.9% உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் 13,507 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதன் உள்நாட்டு விற்பனை ஒரு சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதேசமயம் டொயோட்டா நிறுவனம் தன் விற்பனை 48% குறைந்துள்ளதாகவும், ஆகஸ்டில் 5,555 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளது. கார் நிறுவனங்களில் புது வரவான எம்ஜி மோட்டாரின் விற்பனை 41.2% அதிகரித்துள்ளது. ஆகஸ்டில் 2,851 வாகனங்க‌ள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இருசக்கர வாகனப்பிரிவில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் தன் விற்பனை 8.52% உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் ஆகஸ்டில் 5,68,674 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 2,87,398 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதால் அதன் விற்பனை ஒரு சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சுசுகி நிறுவனம் தன் விற்பனை 15.35% குறைந்துள்ளதாகக் கூறியுள்ளது. ஆகஸ்டில் அந்நிறுவனத்தின் 53,142 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்டில் தங்கள் நிறுவனத்தின் 47,571 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதால் உள்நாட்டு விற்பனை 2% குறைந்துள்ளதாக, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com