இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயல்பாட்டை தொடங்குவதற்காக, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியுடன் டிக்டாக் அதிபர் பைட்டான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் டிக்டாக் நிறுவனர் பைட்டான்ஸ் இந்தியாவில் டிக்டாக்கின் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நிறுவனங்களும் கடந்த மாத இறுதியிலேயே பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில் இன்னும் ஒரு முடிவுநிலையை எட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜூன் மாதம் 29-ஆம் தேதி இந்தியாவில் தடைசெய்யப்பட்ட டிக்டோக்கின் இந்திய வணிக மதிப்பு 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.