மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டால் ஸ்வைப் மெஷின்களுக்கு விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் ஸ்வைப்பிங் மெஷினுக்கு வரிச்சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால் அதன் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படும் பொருட்கள்:
ரயில்வே டிக்கெட் இணையதள முன்பதிவு
திரவ இயற்கை எரிவாயு (LNG)
சோலார் பேனலில் பயன்படுத்தப்படும் சோலார் கண்ணாடி
எரிபொருள் சார்ந்த மின் உற்பத்தி அமைப்புகள்
காற்றலை மின் உற்பத்தி சாதனங்கள்
பாதுகாப்பு துறையினருக்கான குழு ஆயுள் காப்பீடு உள்ளிட்டவற்றின் விலை குறையும் எனத் தெரிகிறது