மெர்சிடஸ் பென்ஸின் எல்டபிள்யூபி மற்றும் வால்வோ எஸ்90 ஆகியவற்றிற்கு போட்டியாக பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ரக புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூபாய் 49.90 லட்சத்திலிருந்து ரூபாய் 61.30 லட்சமாக உள்ளது. இக்காரின் விநியோகம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் துவங்குகிறது.
புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஒரு மாடலாகும். இது 7-வது தலைமுறை 5 சீரிஸ் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கடந்த 2010-ஆம் ஆண்டு பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ரக காரை முதல் முறையாக அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதுவரை 66,000 கார்களை பிஎம்டபிள்யூ விற்பனை செய்துள்ளது. இதில் 30 சதவிகிதம் அதாவது 19,000 கார்கள் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ரக கார்கள் தான்.
2017 பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் புதிய கிளஸ்டர் ஆர்க்கிடெக்சர் அடிப்படையிலான டிசைனில் தயாரிக்கப்பட்டுள்ளது. 7 சிரீஸ் கார்கள் தான் முதன்முறையாக கிளஸ்ர் ஆர்க்கிடெக்சர் டிசைனில் தயாரிக்கப்பட்டது. தற்போது இரண்டவாது முறையாக, இந்த டிசைன் அடிப்படையில் 5 சீரிஸ் ரக கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய 5 சிரீஸ் ரக கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் இரு வகை என்ஜின்களிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. முந்தைய ரக காரைக் காட்டிலும் இக்கார் 70 கிலோ வரை குறைவான எடை கொண்டது.
2017, 5 சீரிஸ் காரில் 18 இஞ்ச் அலாய் வீல்கள், 10.25 இஞ்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே, ரிமோட்டுடன் கூடிய ஐ-டிரைவ் கண்ட்ரோலர், 16 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம் ஆகியவை உள்ளன.
இதேபோல புதிய 5 சீரிஸ் காரில் 6 ஏர் பேக்குகள், ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 10.2 இஞ்ச் பின்பக்க டிஸ்பிளே மானிட்டர்கள், வாய்ஸ் கண்ட்ரோல், கெயிஸ்ஷர் கண்ட்ரோல், மல்டி ஃசோன் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட சகல வசதிகளை கொண்டுள்ளது. இக்காரின் கடைசிகட்ட அசெம்பிள் பணிகள் சென்னையில்தான் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.