இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. வரும் 26-ஆம் தேதி முதல் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பயனரிடம் இருந்தும் கிடைக்கும் வருவாயை (Average Revenue Per User) ஈட்டும் நோக்கத்துடன் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது ஏர்டெல்.
இதன் மூலம் ஒவ்வொரு ரீசார்ஜ் பிளானுக்கும் சராசரியாக 20 முதல் 25 சதவிகிதம் வரை உயர்த்துகிறது ஏர்டெல். ரீசார்ஜ் கட்டணத்தில் ஏர்டெல் மேற்கொண்டு வந்துள்ள விலை உயர்வு காரணமாக வரும் நாட்களில் இந்தியாவின் மற்ற டெலிகாம் நிறுவனங்களும் விலையை மாற்ற வாய்ப்புகள் உள்ளதாக நிதித்துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் சுமார் 321 மில்லியன் மக்கள் ஏர்டெல் டெலிகாம் நிறுவனத்தின் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர் என தகவல்கள் சொல்கின்றன.