அண்மையில் இணைய உலகில் பிஸியாக செயல்பட்டு வருபவர்களை ஆச்சரியப்பட வைத்தது ஒரு சம்பவம். அது NFT எனப்படும் டிஜிட்டல் படைப்பு ஒன்றின் ஏல விலை. Everydays: The First 5000 Days என்ற அந்த படைப்பு சுமார் 504 கோடி ரூபாய்க்கு விலை போனாது. இருப்பினும் அதனை வாங்கியவர்கள் யார் என்பது மர்மமாக இருந்தது. இந்நிலையில் அதனை வாங்கியது தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இருவர் என தெரியவந்துள்ளது. அதை அவர்களே தெரிவித்துள்ளனர்.
சுமார் 5000 படங்கள் மற்றும் வீடியோக்களின் ஒரு படைப்பான இந்த டிஜிட்டல் ஆர்ட்டை கிரிபட்டோ கரன்சி முதலீட்டாளர்களான விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் ஆனந்த வெங்கடேஸ்வரன் ஆகிய இருவரும் தான் வாங்கியுள்ளனர். இதில் விக்னேஷ் சுந்தரேஷனின் புனைப்பெயர் Metakovan மற்றும் ஆனந்தின் புனைப்பெயர் Twobadour ஆகும்.
சுமார் 13 ஆண்டு காலம் தான் சேகரித்த கலைப்படைப்புகளை டிஜிட்டல் வடிவில் உருவாக்கியுள்ளார் பீப்பிள். அவர் உருவாக்கிய அந்த டிஜிட்டல் படம் தான் தற்போது இந்த விலைக்கு ஏலம் போயுள்ளது. இந்த ஏலத்தில் கிரிப்டோ கரன்சி வைத்துள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதன் மூலம் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ உரிமையானது இந்த தமிழர்கள் இருவருக்கும் சொந்தமாகி உள்ளது.
“இதன் மூலம் அனைவரும் சமபலம் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தி உள்ளோம். மேற்கத்தியர்கள் மட்டுமல்ல அனைவரும் சமம் தான்” என விக்னேஷ் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.