"வங்கிகள் இணைப்பு நடைமுறை: ஏப். 1-ல் அமலுக்கு வரும்" நிர்மலா சீதாராமன்

"வங்கிகள் இணைப்பு நடைமுறை: ஏப். 1-ல் அமலுக்கு வரும்" நிர்மலா சீதாராமன்
"வங்கிகள் இணைப்பு நடைமுறை: ஏப். 1-ல் அமலுக்கு வரும்" நிர்மலா சீதாராமன்
Published on

10 பொதுத்துறை வங்கிகளை நான்காக இணைக்கும் நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஒரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகிய வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி இந்தியன் வ‌ங்கியுடனும், ஆந்திரா மறஅறும் கார்ப்பரேஷன் வங்கிகள் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடனும் இணைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.

இதன் மூலம் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 27லிருந்து 12 ஆக குறைந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வங்கிகள் இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, விற்பனை செய்யப்படவிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 விழுக்காடு பங்குகளையும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com