கடந்த நிதியாண்டில் மோசடிகளால் வங்கிகளுக்கு ரூ.16 ஆயிரத்து 789 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பாராளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோசடி கண்காணிப்பு அமைப்புகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பியுள்ள அறிக்கைகள் அடிப்படையில் இத் தகவல் தெரிய வந்ததாக, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவபிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார். எழுத்துப் பூர்வமாக அவர் இந்தப் பதிலை அளித்துள்ளார்.
மற்றொரு கேள்விக்கு அளித்துள்ள பதிலில், ’கடந்த நிதியாண்டில் (2016-17) நாடு முழுவதும் வங்கிகளில் ரூ.65 கோடியே 30 லட்சம் கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் மூலம் போய் விட்ட என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, ஏடிஎம் மற்றும் வங்கி கிளைகளில் பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.