விமான எரிபொருள் விலை 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 7 ஆவது முறையாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து, விமான எரிபொருள் விலை மாதந்தோறும் ஒன்று மற்றும் 16 ஆம் தேதிகளில் மாற்றியமைக்கப்படும் நடைமுறை இந்த ஆண்டு தொடக்கம் முதல் அமலுக்கு வந்தது. அந்த வகையில், ஜனவரி முதல் தற்போது வரை ஏழு முறை விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது, மேலும் 2 சதவிகிதம் விலை உயர்த்தப்பட்டு 1000 லிட்டர் கொண்ட ஒரு கிலோ லிட்டருக்கு 2 ஆயிரத்து 258 ரூபாய் 54 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது விமான எரிபொருள் கிலோ லிட்டருக்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 924 ரூபாய் 83 காசுகளாக அதிகரித்துள்ளது. இதனால், விமான பயணக் கட்டணம் உயர வாய்ப்புள்ளது.