இந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏடிஎம் பயன்பாடு அதிகரித்திருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 2017ஆம் ஆண்டினை ஓப்பிடும் போது 2019ஆம் ஆண்டில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியாவில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 813, ஏடிஎம்கள் இருந்தன. ஆனால் தற்போது 2019ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 131ஆக குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 682 ஏடிஎம்கள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ஏடிஎம்களின் கார்டுகளின் பயன்பாடு அதிகமாகியுள்ளது. 2017ஆம் ஆண்டு ஒரு ஏடிஎம்மில் சராசரியாக நாளொன்றுக்கு 105 பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இதுவே தற்போது 130ஆக உயர்ந்துள்ளது. ஜன்தன் உள்ளிட்ட வங்கி கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், ஏடிஎம் கார்டுகள் அதிகளவில் வழங்கப்பட்டதுமே காரணமாக சொல்லப்படுகிறது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த ஏடிஎம் அட்டைகளின் எண்ணிக்கை 78 கோடி. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இது 88 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.