2016-ன் கடைசி காலாண்டில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்தும் ஆப்பிள் நிறுவனம் சாதனை படைக்கும் அளவிற்கு வருமானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன்கள் மட்டுமின்றி, ஐபாட்கள் மற்றும் மேக் கணினிகள் போன்ற பொருட்களும் கடந்த காலாண்டில் வரலாறு காணாத அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடைசி காலாண்டில் மட்டும் 7830 கோடி ஐபோன்களை விற்றுள்ளது. அதே காலகட்டத்தில், அந்நிறுவனம் 78.4 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக், அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவிலும் ஆப்பிள் நிறுவனத்தின் கடைசி காலாண்டு விற்பனை வரலாறு காணாத அளவுக்கு இருந்தது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ரீடெய்ல் கடைகள் திறப்பது பற்றியும், முதலீடு செய்வது பற்றியும் விவாதித்து வருகிறோம் என கூறியுள்ளார்.