இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைக்க விரும்பும் ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்பிள் இந்தியா நிறுவனம் அதன் உற்பத்தி மற்றும் பழுது பாக்கும் ஆலைகளை இந்தியாவில் தொடங்க 15 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை கேட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் அன்னிய நிறுவனங்கள், 30 சதவீதம் தயாரிப்புக்கு தேவையான பொருட்களை இந்தியாவில்தான் வாங்க வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்துமாறும் அந்த நிறுவனம் கோரியுள்ளது. இந்தச் சலுகைகளை வருவாய்த்துறை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையிடம் கேட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
ஆனால் இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தெரிவித்தார்.