தமிழகத்தில் உற்பத்தியை துவங்க ஆர்வம் காட்டும் ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளர்?

தமிழகத்தில் உற்பத்தியை துவங்க ஆர்வம் காட்டும் ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளர்?
தமிழகத்தில் உற்பத்தியை துவங்க ஆர்வம் காட்டும் ஆப்பிள் நிறுவன உற்பத்தியாளர்?
Published on

ஆப்பிள் நிறுவன டிஜிட்டல் சாதனங்களை உற்பத்தி செய்து வரும் இரண்டாவது பெரிய நிறுவனமான PEGATRON தமிழகத்தில் உற்பத்தி கூடத்தை ஆரம்பிக்க ஆர்வம் காட்டி வருகிறது.

செல்போன் உற்பத்தியில் தகுதியான திறன் படைத்த ஊழியர்கள் தமிழகத்தில் இருப்பது அதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.  

மத்திய அரசின் PLI திட்டத்தின் கீழ் இந்தியாவில் தொழில் தொடங்க விண்ணப்பித்த முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவங்களில் PEGATRON நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆப்பிள் சாதனங்களை உருவாக்கும் FOXCONN நிறுவனத்தின் உற்பத்தி கூடம் தமிழகத்தில் இயங்கி வருகிறது.

PEGATRON நிறுவனத்தின் முதலீட்டை தமிழகம் ஈர்க்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் நிலத்திற்கான குத்தகையில் ஆரம்பித்து கடனுக்கான வட்டி வரை மானியம் அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி கொடுத்துள்ளது. 

இருப்பினும் உத்தரபிரதேசம், ஆந்திர, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பிற மாநிலங்களிலும் உற்பத்தி கூடத்தை அமைப்பது தொடர்பாக PEGATRON ஆலோசித்து வருகிறதாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com