ஸ்மார்ட்போன்கள், ஏசி,பிரிட்ஜ், வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் வொர்க் ஃப்ரம் ஹோம்க்கு தேவையான பொருட்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 17 முதல் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சிறப்பு விற்பனை தொடங்கியவுடன், முதல் 48 மணி நேரத்திற்குள் 1.1 லட்சம் விற்பனையாளர்கள் ஆர்டர்களைப் பெற்றுள்ளனர். இந்த விற்பனையில் பொருட்கள்வாங்கியதில் 91சதவீதம் பேர் புதிய அமேசான் வாடிக்கையாளர்கள், 66 சதவீதம் பேர் தற்போது அமேசான் பிரைம் வாடிக்கையாளராக மாறியுள்ளனர்.இந்த விற்பனையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இ.எம்.ஐ வசதியை பயன்படுத்துகிறார்கள் எனவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது
ஸ்மார்ட்போன்கள், ஏ.சி மற்றும் பிரிட்ஜ் போன்ற பெரிய உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவை அதிக விற்பனையை கண்டுள்ளன. வொர்க் ஃப்ரம் ஹோமுக்கு பயன்படும் மேஜைகள், நாற்காலிகள் மற்றும் அழகுசாதன பொருட்களின் விற்பனையும் மிக பிரபலமாக உள்ளது என்று அமேசான் தெரிவித்துள்ளது. ஐபோன் 11, ரெட்மி நோட் சீரிஸ், ரெட்மி 9 ஏ, ஒன்பிளஸ் 8 டி, ஒன்ப்ளஸ் நோர்ட் மற்றும் சாம்சங் எம் 31 பிரைம் போன்ற செல்போன் மாடல்கள் போன்றவை அமேசானில் பிரபலமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களாக உள்ளன.
அமேசானில் ஒரே நாளில் விற்கப்பட்ட மொத்த ஐபோன்கள் கடந்த ஆண்டின் முழு பண்டிகை விற்பனை காலங்களில் விற்கப்பட்ட மொத்த ஐபோன்களை விட அதிகம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோன் 11 மாடல் 49,999 ரூபாய் எனும் தள்ளுபடி விற்பனையில் கிடைப்பது இதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளது.