விவாகரத்து டீல்: அமேசான் நிறுவனர், மனைவிக்கு வழங்கிய இழப்பீடு இவ்வளவா?

விவாகரத்து டீல்: அமேசான் நிறுவனர், மனைவிக்கு வழங்கிய இழப்பீடு இவ்வளவா?
விவாகரத்து டீல்: அமேசான் நிறுவனர், மனைவிக்கு வழங்கிய இழப்பீடு இவ்வளவா?
Published on

அமேசான் நிறுவனர் தனது மனைவிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து விவாகரத்து பெற்றுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இணைய அங்காடியாகச் செயல்படும் அமேசான் நிறுவனத்தை 1994 ஆம் ஆண்டு தொடங்கியவர் ஜெஃப் பெசோஸ். இவர் மனைவி மெக்கன்சி (MacKenzie Tuttle). இவர்கள் 1993 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். 25 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் விவகாரத்து செய்வதாக அறிவித்தனர். 

தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரன் சான்சஸ் என்பவருடன் ஆபாசமாக ஜெஃப் பெசோஸ் பேசியது போன்ற புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அவரை விவாகரத்து செய்ய, மெக்கன்சி முடிவு செய்தார். இதையடுத்து தங்கள் பங்குகளை பிரித்துகொண்டு விவாகரத்து பெற்றுள்ளனர்.

அதன்படி அமேசான் நிறுவனத்தின் 3600 கோடி டாலர் மதிப்பிலான 4 சதவீத பங்குகள் மெக்கன்சிக்கு வழங்கப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை வழங்கி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளார் பெசோஸ்.

மேலும் வாஷிங்டன் போஸ்ட், விண்வெளி ஆய்வு நிறுவனமான புளு ஆரிஜின் ஆகிய நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளை கணவர் பெசோஸூக்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளார் மெக்கன்சி. இந்த தகவலை இருவரும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து உலக பணக்காரர்களில் ஒருவராக மெக்கன்சி மாறியிருக்கிறார். உலகில் 24 ஆவது பணக்காரராகவும் 3 வது பணக்காரப் பெண்ணாகவும் அவர் இருக்கிறார்.

10 ஆயிரத்து 700 கோடி டாலர் மதிப்பிலான 12 சதவீத பங்குகளை பெசோஸ் தன் வசம் வைத்துள்ளார். சொத்து மதிப்பு குறைந்தாலும் பெசோஸ் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலேயே உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com