கடனில் சிக்கி தொலைபேசி சேவையை கைவிட்ட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை வாங்க பாரதி ஏர்டெல் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் காரணமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது சேவையை கைவிட்டது. அதன் மொபைல் டவர்கள், தொலைத்தொடர்பு கருவிகள், ஸ்பெக்டரம் உரிமம், கண்ணாடி இழை கேபிள் உள்ளிட்ட அனைத்தையும் கொள்முதல் செய்ய ஏர்டெல் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அனில் அம்பானி ராஜினாமா : http://bit.ly/2R5QYnw
அனிலின் சகோதரர் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்துடன் ஏர்டெல் கடும் போட்டியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.