அதிரடியான விலைக் குறைப்பில் ஏர்டெல் ஹாட்ஸ்பாட்!

அதிரடியான விலைக் குறைப்பில் ஏர்டெல் ஹாட்ஸ்பாட்!
அதிரடியான விலைக் குறைப்பில் ஏர்டெல் ஹாட்ஸ்பாட்!
Published on

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏர்டெல் நிறுவனம் 4ஜி ஹாட்ஸ்பாட்டின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ காலடி வைத்த பிறகு, அதிரடியான பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சந்தையில் இயங்கி வரும் பல முன்னணி நிறுவனங்களும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள விலை குறைப்பு, அதிகப்படியான சலுகைகள் என அனைத்தையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி ஹாட்ஸ்பாட்டின் விலையை குறைத்துள்ளது. இதுவரை ரூ.1500-க்கு விற்கப்பட்டு வந்த ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட், 50 சதவீதம் விலை குறைக்கப்பட்டு ரூ.999-க்கு விற்பனை செய்யப்போவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்கள், டேட்டா பேக், உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் என அனைத்திலும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்பாட்டிலும் அதிரடியான விலை குறைப்பை அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் ஜியோவின் 4ஜி ஹார்ஸ்பாட் ரூ.951-க்கு விற்பனையானது, அதனைத் தொடர்ந்து தற்போது ரூ.999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிவேகத்துடன் செயல்படும் ஏர்டெல் ஹாட்ஸ்பாட்டில் 10 டிவைஸ்களை இணைக்கலாம் எனவும், முழுவதுமாக சார்ஜ் செய்த பின்பு, 6 மணி நேரம் வரை பேட்டரி எந்தவித பிரச்னையும் இன்றி இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெலின் இந்த 4ஜி ஹாட்ஸ்பாட்டை மற்ற நிறுவனங்களான வோடோஃபோன் மற்றும் ஜியோவுடன் ஒப்பிட்டு பார்த்தால், ரூ.999-க்கு விற்பனையாகி வரும் ஜியோ ஹாட்ஸ்பாட்டில் 10 டிவைஸ்களை இணைக்கலாம். அதனுடன் மைக்ரோ எஸ்டி ஸ்டொரேஜ் மற்றும் 2,300 பேட்டரி சேவையில் வழங்கப்படுகிறது. அதேபோல் ரூ.1,950-க்கு விற்பனையாகும் வோட்ஃபோனின் 4ஜி ஹாட்ஸ்பாட்டில் 15 டிவைஸ்களை இணைக்கமுடியும். 34 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1,800 மெகா பேட்டரில் இயங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com