ஜியோவின் புதிய ஆஃபர் அறிவிப்பைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.
டெலிகாம் மார்கெட்டில் ஜியோ வருகைக்கு பின்னர், அதிரடியான பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ஏர்டெல், வோடாஃபோன் போன்ற பிரபல நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் டேட்டாவில் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஜியோவின் அதிரடியான 4 புதிய திட்டங்கள் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன. ஜியோவின் இந்த புதிய திட்டங்களில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனமும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 399 க்கு ரீசார்ஜ் செய்தால், நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாத வாய்ஸ் கால்ஸ், நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுங்செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த திட்டம் 70 நாட்களுக்கு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் செயல்பாட்டில் இருந்த ரூ. 399 திட்டம் 28 நாட்கள் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 398 திட்டத்தில் 70 நாட்களுக்கு செயல்படும் 4ஜி வேகத்தில் டேட்டா மற்றும் அளவில்லாத வாய்ஸ் கால்ஸ் சேவை வழங்கப்படுவதாக வெளியான அறிவிப்புக்கு பின்பு, ஏர்டெல் இந்த திட்டத்தில் சில மாற்றங்களை மாற்றி அறிவித்துள்ளது. மேலும், ஏர்டெல்லின் ரூ. 399 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.