கடுமையான கடன் சுமையில் சிக்கித்தவிக்கும் ஏர்-இந்தியா தனியார் மையமாக பைலட்கள் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனங்களில் முதன்மையானதாக கருதப்படுவது ஏர்-இந்தியா நிறுவனமாகும். கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர்-இந்தியா 2012ம் ஆண்டு முதல் தனது ஊழியர்களுக்கு சம்பளக்குறைப்பில் இறங்கியது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், வேறு வழியில்லாமல் சம்பளத்தை குறைத்துக்கொண்டு பணிப்புரியத் தொடங்கினர். இந்நிலையில் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக ஊதியம் கொடுப்பதையே ஒரு கட்டத்தில் நிறுத்தியது ஏர்-இந்தியா நிறுவனம். இதனால் செய்வதறியாமல் தவித்த ஊழியர்களும், விமானிகளும் பலமுறை வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சமீபகாலமாக தனியாருக்கு ஏர்-இந்தியாவை தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்களும், விமானிகளும் பின்னர் தனியாரிடம் இருந்தால் ஊதிய பிரச்சனை இருக்காது என்றும், பல மாற்றங்கள் மூலமாக நிறுவனத்தின் வருவாயை கூடும் என்பதால் தற்போது இத்திட்டத்தை அவர்கள் வரவேற்றுள்ளனர். மேலும் நிலுவையில் உள்ள ஊதியத்தொகையை கொடுத்து விட்டு பின் தனியாருக்கு ஏர்-இந்தியாவை தாரைவாருங்கள் என்றும் ஏர்-இந்தியா ஊழியர்கள் சங்கத்தினர் பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றனர்.