ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விலை உயர்வின்கீழ் 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாகவும், 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு தரப்பட்டுள்ளது. மேலும் ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.535 ஆக இருந்த நெய் பாட்டில் இன்றுமுதல் ரூ.580 ஆக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் நெய் பாட்டில் ரூ.15-ம், 200 மில்லி நெய் ரூ.10-ம், 100 மில்லி ரூ.5-ம் உயர்ந்தது. 5 லிட்டர் நெய் ரூ.2,900, 15 கிலோ ரூ.9,680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் ஆவின் தயிர் விலை 500 மில்லி பாக்கெட் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 200 மில்லி ரூ.18 ஆகவும், 400 கிராம் பிரிமியம் கப் தயிர் ரூ.40-ல் இருந்து 50 ஆகவும், பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது. 50 கிராம் தயிர் விலை உயர்த்தப்படாமல் ரூ.5-க்கு விற்கப்படுகிறது. 200 மில்லி பாக்கெட் லஸ்சி ரூ.20, புரோபயோடிக் லஸ்சி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூ.15-ல் இருந்து ரூ.18 ஆகவும், 200 மில்லி மோர் பாட்டில் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.