“90 சதவீத கடனாளர்கள் ஈ.எம்.ஐ கால அவகாச சலுகையை பயன்படுத்தவில்லை”-எஸ்பிஐ தகவல்

“90 சதவீத கடனாளர்கள் ஈ.எம்.ஐ கால அவகாச சலுகையை பயன்படுத்தவில்லை”-எஸ்பிஐ தகவல்
“90 சதவீத கடனாளர்கள் ஈ.எம்.ஐ கால அவகாச சலுகையை பயன்படுத்தவில்லை”-எஸ்பிஐ தகவல்
Published on

90 சதவீத கடனாளர்கள் ஈ.எம்.ஐ செலுத்துவதற்கான கால அவகாச சலுகையை பயன்படுத்தவில்லை என எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றதில் தெரிவித்துள்ளது.

தவணையை செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு வட்டிக்கு மேல் வட்டி வசூலிக்கப்படுபவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது எஸ்பிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் , “ஏறக்குறைய 90% கடனாளர்கள் ஈஎம்ஐ செலுத்துவதற்கான கால அவகாச சலுகையை பெறவில்ல. ஊரடங்கு காலத்தில் தங்கள் ஈ.எம்.ஐ.களை தவறாமல் செலுத்துகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தவணை உரிமை காலத்தை மத்திய அரசு அறிவித்திருந்தால் அதனுடைய பலன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்திருக்கலாம் என்றும் ஆனால் இந்த விவகாரம் வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்குமான பிரச்னை என மத்திய அரசு நழுவுவதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தை வங்கிகளிடம் மட்டும் விட்டுவிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வட்டி வசூலிக்கும் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் வங்கிகளுக்கு சரியாக மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஊடங்கின் போது கடினமான நேரங்களை எதிர்கொண்ட கடன் வாங்கியவர்களுக்கு உதவுவதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று சுட்டிக்காட்டியதோடு வழக்கின் விசாரணையை 3 வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர். கொரோனா நெருக்கடி காரணமாக, கடனாளர்கள் ஈ.எம்.ஐ செலுத்துவதை தள்ளிவைக்கும் சலுகையை ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்க, வங்கிகளுக்கு, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com