கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு
Published on

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 6 ஆயிரம் கோடி அளவிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு 2021 மார்ச் 31 ஆம் தேதிவரை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரே குடும்பத்தில் அதிகமானோர் அடகு வைத்திருந்தால் களையப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com