சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை ஒருபடி உயர்த்தி அறிவித்துள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி, பணமதிப்பிழப்பு போன்ற பொருளாதார சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டதை அடுத்து நாட்டின் கடன் தகுதி மதிப்பீட்டை ஒரு படி உயர்த்தி மூடிஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச நாடுகளிடம் இருந்து கடன் திரட்டுவது, முதலீடுகளை ஈர்ப்பது போன்ற நடவடிக்கைகள் எளிதாக இருக்கும்.
மூடிஸின் இந்த அறிவிப்பால் இந்தியப் பங்குச் சந்தைகளில் கணிசமான உயர்வு காணப்பட்டது. கடைசியாக கடந்த 2004 ஆம் ஆண்டில் இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீடு உயர்த்தப்பட்டிருந்தது. அதற்குப் பின் 13 ஆண்டுகள் கழித்து மேலும் ஒரு படி உயர்த்தப்பட்டுள்ளது.