என் வாரக் கடைசி பாழாய் போனது - ஜிடிபி வீழ்ச்சி குறித்து ஆனந்த் மகேந்திரா

என் வாரக் கடைசி பாழாய் போனது - ஜிடிபி வீழ்ச்சி குறித்து ஆனந்த் மகேந்திரா
என் வாரக் கடைசி பாழாய் போனது - ஜிடிபி வீழ்ச்சி குறித்து ஆனந்த் மகேந்திரா
Published on

ஜிடிபி வீழ்ச்சி தொடர்பான தகவல் தனது வாரக்கடைசியை பாழாக்கிவிட்டதாக மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த மகேந்திரா தெரிவித்துள்ளார். 

இந்தியப் பொருளாதாரம் 5% வீழ்ச்சியடைந்தது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மகேந்திரா கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில், “நிச்சயமாக இது என் வெள்ளிக்கிழமையை பாழாக்கிவிட்டது. அத்துடன் வாரக்கடைசியையும் இது பாதிக்கும். செய்து முடிக்க ண்டிய வேலை நிறைய இருக்கிறது. ஆனால் நான் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். வங்கிகள் இணைப்பு தொடர்பான நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற ஒரு சீர்த்திருத்த வாரமே, நமக்கு தேவையான டானிக் ஆகும்” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் சேர்ந்த முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது என மத்திய புள்ளியியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் முதல் காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி 5% ஆக குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக, “கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கிகளஇணைக்கப்படும். யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்படும். அத்துடன் இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகள் இணைக்கப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com