80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ‘மில்க் பிக்கீஸ்’ - மீண்டும் தமிழகத்தில் அறிமுகம்

80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ‘மில்க் பிக்கீஸ்’ - மீண்டும் தமிழகத்தில் அறிமுகம்
80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ‘மில்க் பிக்கீஸ்’ - மீண்டும் தமிழகத்தில் அறிமுகம்
Published on

‘மில்க் பிக்கீஸ்’ பிஸ்கெட்டை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோரின் பெரும் கோரிக்கையைத் தொடர்ந்து, 80 மற்றும் 90-களின் தலைமுறைக்குப் பிடித்தமான மில்க் பிக்கீஸ் கிளாசிக் மீண்டும் தொடங்கப்படும் என்று பிரிட்டானியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மார்க்கெட்டிங் துணைத்தலைவர் வினய் சுப்ரமணியம் கூறுகையில், “தமிழ்நாட்டின் நுகர்வோர்கள் சிறுவயதில் மில்க் பிக்கீஸ் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறார்கள். இது தமிழகத்துடன் மிகப்பெரிய உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்ட ஒரு பிராண்ட். இந்த காலங்களில், நாம் கடந்த காலத்தை இன்னும் அதிகமாக விரும்புகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோம். சமீபத்தில் நாங்கள் நடத்திய ஒரு இணைய பிரச்சாரத்தின்போது, தமிழகத்தை சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மீண்டும் ‘மில்க் பிக்கீஸை’  கொண்டுவரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்” எனத் தெரிவித்தார்

மில்க் பிக்கீஸ் கிளாசிக் பிஸ்கெட் தற்போது அதன் பழைய அசல் வடிவத்துடன் வெளிவருகிறது. பிரிட்டானியா என்ற எழுத்துகள் பிஸ்கட்டின் மையத்திலும், மலர் வடிவங்கள் பிஸ்கெட்டின் ஓரத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல அட்டையில் ழக்கமான பிஸ்கெட் பாட்டில் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பிஸ்கெட்கள் அதே பால் சுவையுடனும் இருக்கும் என்றும் பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 65 கிராம் எடையுடைய இந்த பிஸ்கெட் பேக் ரூ10 விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com