Prakash J
முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY (பிலிமடாலஜி) என்று பெயர். 3,500 ஆண்டுகள் பழைமையான இந்து வேத சமஸ்கிருத நூல்களில் முத்தமிடும் பழக்கம் குறித்த சான்றுகள் காணக் கிடைக்கின்றன.
முத்தத்தில், லைட் கிஸ், சிங்கிள் லிப் கிஸ், லிப் லாக், பிரெஞ்சு கிஸ், பட்டர்ஃபிளை கிஸ், எஸ்கிமோ கிஸ், ஃப்ரீஸ் கிஸ், லிக் கிஸ், டாக்கிங் கிஸ், ஃப்ரூட்டி கிஸ் எனப் பல வகைகள் உள்ளன.
முத்தம் கொடுப்பதன் மூலம் தலைவலி, மன அழுத்தம் குறையும். உடல் ரிலாக்ஸ் ஆகும். தொடர்ந்து 1 நிமிடத்துக்கு மேல் முத்தம் கொடுக்கும்போது 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. ஒரு முத்தத்தில் குறைந்தது 12 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
ஒரு சிறிய முத்தத்தில் உதடுகளுக்கு அருகேயிருக்கும் இரண்டு தசைகள் உள்பட, முகத்திலிருக்கும் 12 தசைகளுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. ஆழமான முத்தத்தில் 34 முகத்தசைகள் தூண்டப்படுகின்றன. முத்தம் முகத்திலிருக்கும் 34 தசைகளை இயங்கவைத்து, அவற்றை ஆரோக்கியமாக்கி, முகப்பொலிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
முத்தம் கொடுக்கும்போது உணர்ச்சிகளுக்குக் காரணமாகும் அட்ரினலின் ஹார்மோன் சுரப்பது அதிகமாகும். மகிழ்ச்சிக்குக் காரணமான செரோட்டோனின் சுரப்பு அதிகரிக்கும். மனஅமைதிக்கு உதவும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும். கோபம், உடல் பருமன், கொழுப்பு ஆகியவற்றுக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பு குறையும்.
முத்தம் கொடுக்கும்போது பரிமாறப்படும் உமிழ்நீரில் புரதம் : 0.7 மி.கிராம் இருக்கிறது; கொழுப்பு 0.71 மி.கிராம் இருக்கிறது; உப்பு : 0.45 மி.கிராம் இருக்கிறது; நீர் : 60. மி.கி இருக்கிறது. 10 விநாடி கொடுக்கப்படும் முத்தத்தின் மூலமாக 9 மி.லி உமிழ்நீர் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
ஒரு மனிதன் தனது வாழ்நாளில் முத்தத்துக்காகச் செலவிடுவது 306 மணி நேரம். நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களைவிட 200 மடங்கு அதிகமானது.
மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டுக் கொள்பவர்களின் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்குச் செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறதாம்.
66% பேர் முத்தமிடுகையில் தங்கள் கண்களை இறுக மூடிக்கொள்கின்றனர். மீதிப் பேர் மட்டுமே கண்களைத் திறந்தபடி, தனது பார்ட்னரை பார்த்தபடி முத்தமிடுகின்றனர்.
முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைக்கும். அதேநேரம் ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்கும் என்று சொல்லப்படுகிறது.