‘லட்சியத்தை அடைய அதுதான் வழி..’ கர்மவீரர் காமராஜர் பிறந்த தின சிறப்புப் பகிர்வு!

Prakash J

காமராஜரின் பிறந்த நாள் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவர் உரைத்த பொன்மொழிகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

காமராஜர்

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.

காமராஜர்

எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்.

காமராஜர்

கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது லட்சியத்தை அடைவதில்லை.

காமராஜர்

லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும்.

காமராஜர்

சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.

காமராஜர்

நேற்று, இன்று, நாளை என முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்.

காமராஜர்

பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும்; கிராமங்கள் முன்னேறும்; தேசமே முன்னேறும்.

காமராஜர்

நாம் எதைச் செய்தாலும், ஏன் அதைச் செய்கிறோம் என்று மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

காமராஜர்

ஒன்றைச் செய்ய விரும்புகிறபோது, அதைச் செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்.

காமராஜர்

எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, ஏதேனும் சிறப்புச் சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.

காமராஜர்