சங்கீதா
தனது வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது, கிரிக்கெட் மட்டுமின்றி கால்பந்து, பேட்மிட்டன் போன்ற பல்வேறு விளையாட்டுகளையும் விளையாடி வந்தார் தோனி. வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேசப் போட்டியில் முதன் முதலாக 2004 ஆம் ஆண்டு அறிமுகமான அவர், 2007 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனானர்.
கடந்த 2007-2017 ஆம் ஆண்டு வரை (கிட்டத்தட்ட 10 வருடங்கள்) இந்திய அணியின் அனைத்து வடிவப் போட்டிகளுக்கும் தோனி கேப்டன் பதவியில் இருந்தார். அதில், 2010 மற்றும் 2016 என இருமுறை ஆசியக் கோப்பையையும், 2007-ல் டி20 உலகக் கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்றுள்ளார்.
தோனியின் ட்ரேட்மார்க் (signature) என்று அழைக்கப்படும் ஹெலிகாப்டர் ஷாட்டுக்காகவே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அதுவும் இறுதி ஓவரில், இறுதிப் பந்தில் தோனி ஹெலிகாப்டர் ஷாட் அடிக்க வேண்டும் என்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் காத்திருக்கும்
இந்திய ராணுவத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கௌரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ளார் தோனி. மேலும், பாராசூட் படைப்பிரிவில் தோனி இரண்டு வார பயிற்சியும் பெற்றுள்ளார்.
தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகிய இருவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.1071 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள கிரிக்கெட்டர்களில் மிகவும் அதிக சொத்து மதிப்புக்கொண்ட வீரர்களில் தோனியும் ஒருவர்
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் ஐசிசியின் பிளேயர் ஆஃப் தி இயர் விருதும், விளையாட்டுத்துறையில் இந்தியாவின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் (2007), பத்மஸ்ரீ விருதும் (2009), பத்ம பூஷண் விருதும் (2018) வென்றுள்ளார்.
அழுத்தம் நிறைந்த போட்டிகளிலும், பெரிதாக கோவத்தை காட்டாமல், களத்தில் நம்பிக்கையுடன் அமைதியாக காணப்படுவதாலேயே கேப்டன் கூல் என்று அழைக்கப்படுகிறார் தோனி. அதனால்தான் ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் தனது கேப்டன்சியில் அவர் வென்றிருந்தார்.
அதிவேகத்தில் ஸ்டெம்பிக் செய்பவர் தோனி. அதன்படி, 0.08 வினாடிகளில் ஸ்டெம்பிங் செய்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் 538 ஆட்டங்களில் 195 முறை ஸ்டெம்பிங் செய்துள்ளார் தோனி.
கிரிக்கெட்டைப் போன்று தனிப்பட்ட வாழ்க்கையை விரும்பும் தோனி, கடந்த 2010 ஆம் ஆண்டு சாக்ஷி சிங் ராவத்தை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஜிவா தோனி என்ற மகள் உள்ளார்.
ஆகஸ்ட் 2020 ஆம் ஆண்டில் தோனி தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்தார். மொத்தம் 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள தோனி 17,000 ரன்களையும், விக்கெட் கீப்பிங்கில் 600-க்கும் மேற்பட்ட கேட்ச்களையும் பிடித்துள்ளார்.