ஹேப்பி ரிலேஷன்ஷிப் வேணுமா? இந்த சின்ன சின்ன விஷயங்களை செய்ங்க! #CoupleGoals #RelationshipAdvice
ஜெ.நிவேதா
தேவைப்படும் சூழல்களிலெல்லாம் பார்ட்னருக்கு Hi - Bye சொல்லிப்பழகுங்க. இது உறவுக்குள் மரியாதையை ஏற்படுத்தும்
நேரம் கிடைக்கும்போது, பார்ட்னரின் கைகளைப் பற்றிக்கொள்ளுங்கள். இது உறவுக்குள் பிணைப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
வெளி இடங்களுக்கு செல்கையில், ரொம்பவும் விலகி உட்காராமல், அருகருகே உட்காருங்கள். இது இருவருக்கும் இடையேயான பிரச்னைகளையும் குறைக்கும்!
உங்களுடைய பிஸியான நாளிலும், அவர்களுக்கென நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் அவர்கள் பிஸியாக இருந்தால், அவ்வேலைக்கு உங்களால் செய்ய முடிந்த உதவிகளை செய்யுங்கள்
தினமும் அவர்களிடம் ‘இன்னைக்கு உன்னோட நாள் எப்படி போச்சு’ என கேளுங்கள். அவர்கள் பதில் சொல்கையில், அதற்கு செவிகொடுங்கள்.
உங்கள் இருவருக்கிடையேயான வாதங்களையோ சண்டையையோ, மூன்றாம் நபர் முன் (குறிப்பாக வீட்டிலுள்ள குழந்தை முன்) போடாதீர்கள்
ஒருவருடைய வேலையை, இன்னொருவர் மதித்து நடந்துகொள்ளுங்கள். வீட்டு வேலையென்றால் குறைவு, அலுவல் வேலைதான் பெரிது / ‘என் ஆஃபிஸ் வேலைதான் பெரிது’ என்று எப்போதும் சொல்லாதீர்கள்
உறவில் சின்ன சின்ன மன்னிப்புகளும் பெரியளவில் நிம்மதியை கொடுக்கும். உங்கள் மீது தவறிருந்தால் நிச்சயம் சாரி சொல்லுங்கள். மீண்டும் அந்த தவறை செய்யாது இருங்கள்.
உங்கள் பார்ட்னர் உங்களுக்கு கிஃப்ட்டோ மெமரீஸோ கொடுத்தால், நன்றி சொல்லுங்கள்!