ஜெ.நிவேதா
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7-ம் தேதி (இன்று) உலக உணவுப்பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் ஈடுபட மக்களை ஊக்கவிக்கவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகளவில் ஒரு நாளில் சராசரியாக 16 லட்சம் பேர் பாதுகாப்பற்ற உணவை சாப்பிட்டு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
உலக சுகாதார நிறுவனமும், ஐ.நா. உறுப்பு அமைப்பான உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணைந்துதான் இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிப்பது என்று தீர்மானித்து முன்னெடுத்தது.
அதன்பேரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்நாளை அறிவித்தது. தொடர்ந்து 2019 ஜுன் 7-ல் இத்தினம் முதன்முறை கடைபிடிக்கப்பட்டது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சராசரியாக 340 பேர் உணவினால் ஏற்படும் நோய் பாதிப்புகளால் (தடுக்கப்பட்டிருக்க முடிந்த விஷயம் இது) இறக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்
பாதுகாப்பற்ற உணவால், வயிற்றுப்போக்கு முதல் புற்றுநோய் வரை 200 வகை நோய்கள் உலகில் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனம்
பாதுகாப்பற்ற உணவால் ஏற்படும் நோய்கள், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பத்தில் ஒருவரை பாதிக்கிறது.
இந்த வருடம், இத்தினத்துக்கான மையக்கரு, ‘Food Standards Save Lives’ என்பதாகும். அதாவது தரமான உனவு, உயிர்களை காக்கும் என்பதாகும்.
இன்று முதல் நல்லா சாப்பிடுவோம் என்ற உறுதிமொழியுடன் நல்லதை மட்டுமே சாப்பிடுவோம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக்கொள்வோம்.