ஜெனிட்டா ரோஸ்லின்
உலக சிங்கங்கள் தினம் முதன்முதலில் 2013-ல் பிக் கேட் ரெஸ்க்யூவின் டெரெக் மற்றும் பெவர்லி ஜோபர்ட் ஆகியோரால் கடைபிடிக்கப்பட்டது.
குறைந்து வரும் சிங்கங்களின் எண்ணிக்கை மற்றும் காடுகளில் அவை எதிர்க்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடைபிடிக்கப்படுகிறது.
ஆண் ஆப்பிரிக்க சிங்கங்களின் எடை 150 கிலோ - 250 கிலோ வரையிலும், பெண் ஆப்பிரிக்க சிங்கங்களின் எடை 120-182 கிலோ வரையிலும் இருக்கும்.
காடுகளில் சிங்கங்கள் சுமார் 10-14 ஆண்டுகள் வாழ்கின்றன. இருப்பினும், அவை அடைத்து வைக்கப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு மேல் வாழலாம் எனக் கூறப்படுகிறது.
சிங்கங்கள் தங்களின் வாழ்நாளின் பெரும் பகுதியை உறக்கத்திற்காக செலவு செய்கின்றன. இதன்படி, ஒரு நாளைக்கு 21 மணி நேரத்தை தூங்குவதற்காக செலவு செய்கின்றன. இதன் மூலம் வேட்டையாடுவதற்கு தேவையான ஆற்றலைப் பாதுகாக்கின்றன.
அழிந்து வரும் உயிரினங்களின் வரிசையில் சிங்கமும் ஒன்றாக கருதப்படுகிறது. இதன்படி, உலகில் 23,000 சிங்கங்கள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கங்கள் தாங்கள் வாழும் வாழிடங்களை பாதுகாக்கவும், சண்டையிடுவதற்காகவும் கர்ஜணை செய்கிறது. சிங்கக்குட்டிகள் 2-3 மாதங்களை அடைந்தவுடன் கர்ஜணை செய்ய முயற்சி செய்கிறது.
சிங்கத்தின் கர்ஜணை 5 கிலோமீட்டர் தூரம் வரைகூட கேட்கும் எனக் கூறப்படுகிறது.
ஆண் சிங்கங்களின் ரோமங்கள் 16 செ.மீ நீளம் வளரக்கூடியது. இது துணையை ஈர்ப்பதற்கும், எதிரியை பயமுறுத்துவதற்கும் பயன்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் குறிப்பிடத்தக்க அளவிற்கு சிங்கங்கள் வசிக்கின்றன.