Johnson
குறட்டை விடும் பிரச்சனை, ஒரு இளைஞனுக்கு எப்படி நிம்மதியை குலைத்துப் போடுகிறது என்பதே படத்தின் ஒன்லைன்.
லாலா லேண்ட் இயக்கிய Damien Chazelle இயக்கத்தில் வெளியான படம் Babylon. ஹாலிவுட்டின் வளர்ச்சி காலம் எப்படி இருந்தது என்பதை சில சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை வைத்து ப்ளாக் காமெடியாக சொல்லியிருக்கிறது படம்.
தன் குடும்பத்திற்காக கால் செண்டர் அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார் ஒரு தாய். அங்கு அவளுக்கு வரும் ஆபத்துகள் என்ன? அதை எப்படி சரிசெய்கிறார்? என்பதுதான் `ஃபர்ஹானா’ படத்தின் கதை.
மிகப்பெரிய பணக்காரனாக ஆசைப்படும் இளைஞனுக்கு, ஒரு பெண்ணை கடத்தும் வேலை கொடுக்கப்படுகிறது. இதன் பின் என்ன ஆகிறது என்பதுதான் படம்.
பலம் வாய்ந்த கேங்ஸ்டருக்கும் - முரட்டுத்தனமான ஹீரோவுக்கும் இடையேயான மோதல் தான் ஆர்யா நடித்திருக்கும் `காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ படத்தின் கதை.
ஆர்ச்சி தன் உடன் பணிபுரியும் பெண்ணைக் காதலிக்கிறார். காதல் கைகூட அவர் செய்யும் விஷயங்கள் என்ன? ஓகே ஆனதா? இதெல்லாம் தான் Archier Galler என்ற பெங்காலி படத்தின் கதை.
மீனவர்கள் சிலர் தங்கள் வேலைக்காக கடலுக்குள் சென்று, விரிக்கும் வலையில் ஒரு பெண் கிடைக்கிறார். அவர் படகிற்கு வந்த பின் என்ன நடக்கிறது என்பதே Hawa என்ற பெங்காலி படத்தின் கதை.
மூன்று இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சாதி ரீதியான பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறது Unaad என்ற மராத்தி படம்.
இந்தியாவின் மீது பத்தே நாட்களில் ஒரு தாக்குதல் நடக்க இருக்கிறது என்ற தகவல் உளவுத்துறைக்கு கிடைக்கிறது. அதை தடுத்து நிறுத்த முடிந்ததா என்பதே IB71 இந்தி படத்தின் கதை.
Gabriele Amorth என்ற பாதிரியார் ஒரு குழந்தையை பிடித்திருக்கும் தீய சக்தியை விரட்ட போகிறார். அங்கு நடக்கும் விஷயங்கள் தான் The Pope's Exorcist படத்தின் கதை.