Angeshwar G
பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துகுமார், 12.07.1975 பிறந்தார். ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களையும் பல புத்தகங்களையும் கவிதைத் தொகுப்புகளையும் எழுதிய இவர், எக்காலத்திற்குமான எதார்த்த கவிஞன்! இவர் எழுத்தில் வந்த, நம் மனதை விட்டு நீங்கா சில பாடல் வரிகள் இங்கே...
உன்னோடு நானும் போகின்ற பாதை... இது நீளாதோ!
தொடு வானம் போலவே
கதை பேசிக் கொண்டே, வா காற்றோடு போவோம்!
உரையாடல்
தீர்ந்தாலும் உன் மௌனங்கள்
போதும்..
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்,
கூந்தலை போய்தான் சேராதோ?
ஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது..
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது!
தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான்
வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா?
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்,
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்!
கரை வரும் நேரம் பார்த்து,
கப்பலில் காத்திருப்போம்!
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்!
இரு நெஞ்சம் இணைந்து பேசிட
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை…
சிறு புல்லில் உறங்கும் பனியில்
தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை…
அடி கோவில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே.. ஓஹோ
முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்னப் புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்!
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்!
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே!
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே!
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து…!
அழகே அழகே எதுவும் அழகே
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே!
மழை மட்டுமா அழகு !
சுடும் வெயில் கூட ஒரு அழகு !
மலர் மட்டுமா அழகு !
விழும் இலை கூட ஒரு அழகு !
புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு!
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…
தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…
தந்தை அன்பின் பின்னே…
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை…
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை…
என்னுயிர் அணுவில் வரும் உன் உயிர் அல்லவா…
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா…
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்…
ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…
இரவு வரும் திருட்டு பயம்…
கதவுகளை சோ்த்து விடும்…
ஓ… கதவுகளை திருடிவிடும்…
அதிசயத்தை காதல் செய்யும்…
இரண்டும் கை கோர்த்து சோ்ந்தது…
இடையில் பொய்பூட்டு போனது…
வாசல் தல்லாடுதே…
திண்டாடுதே… கொண்டாடுதே…