காய்கறி விலையேற்றமா.. இனி கவலை வேண்டாம்! குறைந்த செலவில் மாடித் தோட்டம் அமைக்க சிம்பிள் டிப்ஸ்!

PT WEB

சரியான திட்டமிடல்

ஒவ்வொரு காலச்சூழ்நிலைகளிலும் சில காய்கறிகளின் விலை என்பது ஏற்றம் அடைந்து கொண்டே இருக்கத்தான் செய்யும். ஆனால், மிக குறைந்த செலவும் இடமும் இருந்தால் மாடித்தோட்டம் அமைப்பதற்கு போதுமானது என்பது அனைவரும் அறிந்ததே. இதனை சரியான திட்டமிடுதலுடன் அமைப்பதற்கான முக்கிய குறிப்புகளை பின்வருமாறு காண்போம்.

குறைந்த இடம் போதும்

வீட்டில் மாடித் தோட்டம் அமைக்க 300 முதல் 600 சதுரடி இடமே போதுமானதாக இருக்கும். அதற்கு அதிகமான இடம் தேவையைப் பொருத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

இடம் தேர்வு

மாடியில் தோட்டம் அமைப்பதற்கான இடத்தினை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அது வெயில் படும்படியான இடமாகவும் இருக்க வேண்டும்.

பை அல்லது தொட்டி பயன்படுத்தலாம்

விதைகளை நடவு செய்வதற்கு பை அல்லது தொட்டியினை பயன்படுத்தவேண்டும். மேலும் தொட்டியின் அடிப்பகுதியில் சிறிய துளைகளை இடவேண்டும்.

இயற்கை உரங்கள்

தொட்டியில் இயற்கை உரங்களுடன் கூடிய மண்ணை விதைகளுக்கு ஏற்ப தேவையான அளவு நிரப்பி கொள்ளவேண்டும்.

சரியான காலம்

விதையினை நடவு செய்வதற்கு கோடைகாலம் இல்லாமல் ஜூன், ஜூலை, அக்டோபர் உள்ளிட்ட ஒரு சில பருவக் காலங்களில் நடவு செய்யலாம்.

நாட்டு விதைகள்

சரியான நாட்டு விதைகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை நம் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும்.

ஆழமாக ஊன்ற வேண்டும்

விதையினை சரியான ஆழத்தில், அதாவது விதையினை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

சொட்டு நீர் பாசனம் முக்கியம்

சரியான அளவில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். அவற்றில் சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

சரியான அளவில் வெயில் தேவை

தொட்டியில் உள்ள செடியானது 4 முதல் 6 மணி நேரம் வெயில் படும்படி இருத்தல் அவசியமாகும். அத்துடன், செடி வளர்ந்தவுடன் தொட்டியில் உள்ள மண்ணை கொத்திவிட வேண்டும்.

சரியான அளவில் பூச்சிக்கொல்லி மருந்து

தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு இயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லியும் சரியான அளவு பயன்படுத்த வேண்டும்.

இயற்கை உரம்

மண்புழு உரம், மாட்டின் எரு மற்றும் வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை உரமாக பயன்படுத்தலாம். மேலும், வீட்டில் பயன்படுத்திய காய்கறி, பழ மற்றும் முட்டை ஓடுகளை உரமாக பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும்.

நிழலும் அவசியம்

வளர்ந்த செடி கருகாமல் இருக்க போதுமான அளவு நிழலும் அவசியமானதாக உள்ளது. அத்துடன் சரியான நேரத்தில் அறுவடையும் செய்துவிட வேண்டும்.

மகிழ்ச்சியை கொடுக்கும் மாடித்தோட்டம்

இத்தகைய, மாடித்தோட்ட முறையில் காய்கறிகளை பயிரிடுவதால், உடல் ஆரோக்கியம் மற்றும் தோட்டத்தினை பராமரிப்பதால் மனதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

- எம்.கே. அரவிந்த்