ஜிம்பாப்வே அதிபர் பதவியில் இருந்து விரைவில் முகாபே நீக்கப்படுவார் என ஆளும் ஜானு - பிஎஃப் கட்சி தெரிவித்துள்ளது.
ஜிம்பாப்வேயில் கடந்த வாரம் அதிரடியாக ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. இந்த சம்பவம் சர்வதேச நாடுகளின் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்கு ராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் சந்தேகம் எழுப்பியது. அத்துடன் முகாபே பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலகுவதற்கு முகாபே மறுத்துவிட்டார்.
இந்நிலையில் அதிபர் பதவியில் இருந்து விரைவில் முகாபே நீக்கப்படுவார் என ஆளும் ஜானு - பிஎஃப் கட்சி அறிவித்துள்ளது. அத்துடன் அரசமைப்பு அதிகாரத்தை கைப்பற்ற மனைவி கிரேஸுக்கு அனுமதி வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக முகாபே மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கான நடைமுறைகள் முடிந்ததும் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் பதவியில் இருந்து விலகுவதற்காக முகாபேவுக்கு வழங்கப்பட்ட கெடு முடிவடைந்த நிலையில், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.