உலகம்

ஜிம்பாப்வே அதிபர் முகாபே அவர் இருந்த கட்சியிலிருந்து நீக்கம்

ஜிம்பாப்வே அதிபர் முகாபே அவர் இருந்த கட்சியிலிருந்து நீக்கம்

webteam

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே ஆளும் ஸானு பிஎஃப் (ZANU-PF) கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஸானு பிஎஃப் கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து முகாபேவின் 37 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது. துணை அதிபர் பொறுப்பில் இருந்து முகாபேவால் நீக்கப்பட்ட நன்காக்வா ஸானு பிஎஃப் கட்சியின் புதிய தலைவராக நிமியக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாபேவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவிவிலககோரியும் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவம் அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு, முழு அதிகாரத்தையும் கைப்பற்றி முகாபேவை வீட்டுச் சிறையில் அடைத்தது.