உலகின் டாப்-10 உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
World of Statistics வெளியிட்டுள்ள தகவலின்படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க், 189 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார்.
LVMH நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள பெர்னார்ட் அர்னால்ட் 167 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக கவுதம் அதானி 127 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3-வது இடத்தில் உள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 117 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4-வது இடத்தில் இருக்கிறார்.
பில் கேட்ஸ் இந்த பட்டியலில் 117 பில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க தொழிலதிபர் வாரன் எட்வர்ட் பஃபெட் 110 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6-வது இடத்தில் உள்ளார்.
அதேபோல் மற்றொரு அமெரிக்க தொழிலதிபரான லேரி எலிசன் 97 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 7-வது இடத்தில் இருக்கிறார்.
முகேஷ் அம்பானி 94.8 பில்லியன் டாலர்களுடன் 8-வது இடத்தில் உள்ளார்.
அமெரிக்க தொழிலதிபர் லாரி பேஜ் 92.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 9-வது இடத்திலும்,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான ஸ்டீவ் பால்மர் 90.5 பில்லியன் டாலர் சொத்துடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.
தவற விடாதீர்: ஆண்களை பாதிக்கும் விதைப்பை புற்றுநோய் - கொய்யா இலையில் தீர்வா?